» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மாணவர்கள் பகுத்தறிவு பாதையில் நடைபோட்டு, தடைகளை தகர்தெறிய வேண்டும்: முதல்வர்

வெள்ளி 29, ஜூலை 2022 11:34:43 AM (IST)



மாணவர்கள் பகுத்தறிவு பாதை நடைபோட்டு, வளர்ச்சிக்கு தடையாக இருப்பதைத் தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இந்த நிகழ்வில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற 69 மாணவா்களுக்கு பிரதமா் மோடி பதக்கங்களை வழங்கினார்.

விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘கல்வி என்பது யாராலும் பறிக்க முடியாத சொத்து. பட்டம்பெற்ற நீங்கள்தான் நாட்டை செழிக்கச் செய்யும் வல்லுநர்கள். பழைமைவாதத்தை புறந்தள்ளி புதிய கருத்துகளை ஏற்று மாணவர்கள் பகுத்தறிவு பாதை நடைபோடுவதுடன் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதைத் தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும். தமிழர்கள் தொழிநுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்’ எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory