» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி: ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்!
சனி 7, மே 2022 5:33:59 PM (IST)
"திமுகவின் ஓராண்டு ஆட்சி, தமிழக மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து, மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி அமைந்து ஓராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. இதேபோல, 30 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டாகியும் திமுக அரசு இதுகுறித்து வாய் திறக்கவில்லை. மகளிர் எதிர்பார்த்த முக்கியமான வாக்குறுதியான மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படாததால், மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும் என்பதற்கேற்ப அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை தேர்தல் ஆணையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
புதன் 27, ஆகஸ்ட் 2025 4:16:06 PM (IST)

ஆதாரை ஏற்காதது ஏன்? - தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 4:39:42 PM (IST)

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:09:14 PM (IST)

த.வெ.க. பேனர்களில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்த தடை!
சனி 2, ஆகஸ்ட் 2025 4:53:40 PM (IST)

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
திங்கள் 21, ஜூலை 2025 12:33:27 PM (IST)
