» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
கிழக்கு கடற்கரை சாலை பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் கூட விரும்ப மாட்டார்கள்: ஜெயக்குமார்
திங்கள் 2, மே 2022 4:16:36 PM (IST)
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் கூட விரும்ப மாட்டார்கள். என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் இன்று கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சுட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும். அப்படி புகழ்பெற்ற சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் கூட விரும்ப மாட்டார்கள். அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகத்தை அதிகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியர் மோதிக் கொள்வது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதிகரித்துள்ளது.
விலைவாசி மற்றும் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். பள்ளிக் கல்வித் துறை விழிப்போடு இருந்தால் மாணவிகள் சண்டை போல் பிரச்னைகள் வராது. அடுத்த பொதுத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மட்டுமே. ஹிந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்தலாம், எந்த பிரச்னையும் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
KARNARAJ RAMANATHANமே 3, 2022 - 12:16:25 PM | Posted IP 108.1*****
NAMING ....CHANGING NAMING..DIRAVIDA KALACHAARAM. LET GOVERNMENT CONCENTRATE ON DEVELOPMENT OF TN and repay borrowed money (in order to reduce huge interest).
ggggமே 2, 2022 - 05:11:46 PM | Posted IP 162.1*****
Apo mgr central, mgr கோயம்பேடு நாங்க விரும்புனோமா?
மேலும் தொடரும் செய்திகள்

விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ, கோட்பாடோ கிடையாது: சீமான் விமர்சனம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:20:15 AM (IST)

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: தேர்தல் ஆணையக் குழு ஆய்வு நிறைவு!
சனி 28, பிப்ரவரி 2026 5:16:35 PM (IST)

லட்சக்கணக்கான கோடி கடன் எங்கே போனது? தமிழக பட்ஜெட் குறித்து அண்ணாமலை கேள்வி
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:43:06 PM (IST)

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:25:19 PM (IST)

விஜய் மீதான பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது : நிர்மலா சீதாராமன்
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 5:16:38 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வியாழன் 22, ஜனவரி 2026 3:32:40 PM (IST)


ஜெ விசுவாசிமே 5, 2022 - 03:44:20 PM | Posted IP 108.1*****