» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை சிசிடிவி பதிவு!
திங்கள் 3, ஜனவரி 2022 5:29:03 PM (IST)
வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஜனவரி 31-ந்தேதிக்குள் இந்த தேர்தலை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பொங்கலையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணைய விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை தேர்தல் ஆணையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
புதன் 27, ஆகஸ்ட் 2025 4:16:06 PM (IST)

ஆதாரை ஏற்காதது ஏன்? - தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 4:39:42 PM (IST)

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:09:14 PM (IST)

த.வெ.க. பேனர்களில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்த தடை!
சனி 2, ஆகஸ்ட் 2025 4:53:40 PM (IST)

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
திங்கள் 21, ஜூலை 2025 12:33:27 PM (IST)

MuruganJan 22, 2022 - 08:56:52 AM | Posted IP 173.2*****