» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு: அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திங்கள் 6, டிசம்பர் 2021 4:19:18 PM (IST)
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிச. 3, 4 தேதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்ற நிலையில், டிச, 4 ஆம் தேதி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு எடப்பாடி கே. பழனிசாமியும் ஒன்றாக வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்கள் இருவருக்கும் எதிராக யாரும் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அதிமுக தரப்பில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் தேர்தல் ஆணையருமான சி.பொன்னையன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். முன்னதாக, அதிமுக உள்கட்சித் தேர்தலுக்கு தடை கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!!
வெள்ளி 27, ஜூன் 2025 11:13:59 AM (IST)

2026 தேர்தலுக்கு கற்பனை வீடியோ போதும் என்று நினைத்து விட்டார்கள் : முதல்வர் விமர்சனம்!
செவ்வாய் 17, ஜூன் 2025 4:57:38 PM (IST)

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
செவ்வாய் 3, ஜூன் 2025 5:31:25 PM (IST)

ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
வியாழன் 29, மே 2025 4:59:01 PM (IST)

பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
திங்கள் 19, மே 2025 11:46:16 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

MGR & ஜெயலலிதா விசுவாசிகள்Dec 10, 2021 - 03:38:37 PM | Posted IP 162.1*****