» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

பொங்கலுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

புதன் 17, நவம்பர் 2021 12:07:55 PM (IST)பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம்  அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட 20 பொருள்கள் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் வசிக்கும் 2கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்ககுக்கு 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

DURAINov 18, 2021 - 08:59:29 PM | Posted IP 173.2*****

2500 yeppam thana

PETCHIMUTHUNov 17, 2021 - 12:20:36 PM | Posted IP 108.1*****

அப்போ கரும்பு கிடையாதா?

ராமநாதபூபதிNov 17, 2021 - 12:20:18 PM | Posted IP 108.1*****

பொருட்களோட எண்ணிக்கை 19 தான் வருது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory