» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இந்தியாவில் ஒரு கோடி பேர் வேலையிழக்க பிரதமர் மோடியே காரணம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

வியாழன் 3, ஜூன் 2021 4:49:55 PM (IST)

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழந்ததற்கு பிரதமர் மோடியே பொறுப்பு என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு முதல் அலையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தொற்று பரவல் மிகத்தீவிரமாகப் பரவியதால் பல்வேறு மாநிலங்களும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. இந்தப் பொதுமுடக்கம் காராணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பால் நாட்டில் ஒரு கோடி பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளதாக இந்தியப் பொருளாதார மத்திய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தனது ட்விட் பதிவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது நாட்டில் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடி மட்டுமே பொறுப்பு” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

UNKNOWNJun 8, 2021 - 08:26:42 PM | Posted IP 173.2*****

DONT KNOW WHAT HAPPEND IN EARLIER AND PLEASE MAKE SURE PLAN FOR BRIGHT FUTURE WE EXPEDITIRE THE SAME FROM YOU GOOD RULE

adaminJun 8, 2021 - 06:05:01 PM | Posted IP 46.16*****

apo corona kaaranam illaiyaa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory