» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
அதிமுகவில் 3 அமைச்சர்கள் உட்பட 35 பேருக்கு கல்தா: திமுகவுக்கு தில் இல்லையா? தொண்டர்கள் புலம்பல்
வெள்ளி 12, மார்ச் 2021 5:24:43 PM (IST)
அதிமுகவில் 3 அமைச்சர்கள் உட்பட சுமார் 35 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுகவில் பழைய ஆட்களுக்கே மீண்டும் சீட் கொடுத்ததால் கட்சியினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்றெல்லாம் கதையளக்கப்பட்டது. ஆனால், ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கும் பட்டியலோ அவர் இதனை நாளும் சொன்னதற்கு நேரெதிராக இருக்கிறது. இது பற்றி நம்மிடம் பேசிய உ.பிக்கள் சிலர், இத்தனை இழுத்தடித்துக்கொண்டே போனதால், ரொம்ப வடிகட்டி எடுத்து வேட்பாளர்களை நிறுத்தப்போகிறார் தலைவர் என்றுதான் எதிர்பார்த்திருந்தோம். ஐபேக் சர்வேயின்படி வேகாத பழைய ஆட்களை எல்லாம் நீக்கிவிட்டு, துடிப்பான இளையோரை அதிகமாக களமிறக்குவார் என்று என்ற எதிர்பாப்பில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார் தலைவர்.
இது ஐபேக் கொடுத்த லிஸ்ட்தானா? இல்லைஅதை தூக்கி எறிந்துவிட்டு இவர்களாகவே புதிதாக தயாரித்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. தெற்கே சுரேஷ் ராஜனில் தொடங்கி ஆவுடையப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன், நேரு, பொன்முடி, எ.வ. வேலு, துரைமுருகன், தா.மோ அன்பரசன் என்று ஊருக்கு ஊர் பழைய ஆட்களையே வேட்பாளர்களாக போட்டிருக்காங்க என்றும் புலம்புகின்றனர்.
மேலும், மாறி மாறி இந்த மாதிரி ஆட்களுக்கே கொடுத்தால் மற்ற கட்சிக்காரங்களோட நிலை என்னவாகுறது. மொத்தத்தில் திமுக வாரிசு கட்சிதான்னு அழுத்தமா சொல்லியிருக்குது இந்த வேட்பாளர் பட்டியல் என்கிறார்கள். அதிமுகவில் 3 அமைச்சர்கள் உட்பட சுமார் 35 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு கல்தா கொடுத்திருக்காங்களே. அந்த தைரியம் இவங்களிடம் ஏன் இல்லை என்றும் கேட்கிறார்கள். இன்று வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியல் ஐபேக் பட்டியல்தானா? என்று எழும் கேள்வுகள் குறித்து ஐபேக் தரப்பில் விசாரித்தபோது, நாங்கள் கொடுத்த பட்டியல் இதுவல்ல. கடைசி நேரத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் அமைதியாக முடிந்தது சட்டசபை தேர்தல்: 72 சதவீதம் வாக்குப்பதிவு
புதன் 7, ஏப்ரல் 2021 11:41:50 AM (IST)

வேட்பாளர்களுக்கு கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
செவ்வாய் 30, மார்ச் 2021 4:21:14 PM (IST)

கொள்ளையடிப்பதற்காக ஆட்சிக்கு வரத் துடிக்கறார்கள்: திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு!!
திங்கள் 22, மார்ச் 2021 11:55:23 AM (IST)

கரோனா காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்
புதன் 17, மார்ச் 2021 5:17:03 PM (IST)

மு.க.ஸ்டாலின், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு!!
செவ்வாய் 16, மார்ச் 2021 3:48:50 PM (IST)

வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி; அனைவருக்கும் வாஷிங்மெஷின் : அதிமுக தேர்தல் வாக்குறுதி
ஞாயிறு 14, மார்ச் 2021 6:45:12 PM (IST)
