» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்

புதன் 20, ஜனவரி 2021 5:29:20 PM (IST)

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான மனுவை மத்திய அரசின் மனுவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட உள்ள டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க கோரி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது அப்போது கூறிய உச்ச நீதிமன்றம்,   டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை அனுமதிப்பதில் முடிவு எடுக்க வேண்டியது டெல்லி போலீஸார்தான். 

இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே கூறிவிட்டோம். இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காது. ஆதலால், நீங்கள் உங்கள் மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்கிறோம். டெல்லி போலீஸாருக்குதான் இதில் அதிகாரம் இருப்பதால், அவர்கள்தான் இதைக் கையாள வேண்டும்” எனக் கூறியது. மேலும்,  டிராக்டர் பேரணிக்கு எதிரான மனுவை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory