» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

கரோனா ஊரடங்கு ஏழைகள் மீது தொடுக்கப்பட்ட 3வது தாக்குதல் : ராகுல் விளக்கம்

புதன் 9, செப்டம்பர் 2020 5:46:09 PM (IST)

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏழை மக்கள் மீது தொடுக்கப்பட்ட மூன்றாவது பொருளாதாரத் தாக்குதல் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

இந்திய பொருளாதாரம் குறித்த தன்னுடைய கருத்துக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பகுதி பகுதியாக வெளியிட்டு வருகிறார் இதுவரை மூன்று தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன நான்காவதான இறுதி தொகுப்பு இன்று வெளியிடப்பட்டது. அந்தத் தொகுப்பில் கரோனா வைரஸ் அதன் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கு ஆகியவை இந்திய பொருளாதாரத்தை எப்படி பாதித்துள்ளன என்று விளக்கியுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதும் அதனை 21 நாட்களுக்குள் வெற்றி கொள்வேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார் ஆனால் இந்தியா முழுக்க பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது பொது ஊரடங்கு காரணமாக இந்தியாவின் அமைப்பு சாராத தொழில்துறையின் முதுகெலும்பு முடிக்கப்பட்டது.

பொது இடங்களை முன்கூட்டியே அறிவிப்பு தயாரிப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திடீர் என்று அறிவித்து விட்டார் அது இந்திய ஏழை மக்கள் மீது தொடுக்கப்பட்ட மூன்றாவது தாக்குதலாக அமைந்துள்ளது முதல் தாக்குதல் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது ஆகும் இரண்டாவது தாக்குதல் தவறான முறையில் ஜிஎஸ்டி சட்டத்தை அவசர அவசரமாக அறிவித்து அமல் செய்வது ஆகும் மூன்றாவது தாக்குதல் திடீர்னு ஊரடங்கு காரணமாக இந்திய அமைப்பு சாராத தொழில்துறை சீர்குலைந்தது ஆகும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் இந்தியாவில் உள்ள சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டன இதில் பணியாற்றிய தொழிலாளர்கள் எல்லாம் தினக்கூலி தொழிலாளர்கள் ஆவார்கள் அவர்கள் தினசரி கூலி சம்பாதித்து அதன்மூலம் அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர் இந்திய அரசு திடீரென பொது ஊரடங்கு அறிவித்தது அவர்கள் மீதான பொருளாதாரத் தாக்குதலாக அமைந்துவிட்டது இந்தியாவில் ஏழை மக்களுக்கு உதவ.ரொக்கமாக நிவாரண பணம் வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் திரும்பத்திரும்ப வலியுறுத்தியது 

ஆனால் அரசு அதை காதில் போட்டு கொள்ளவே இல்லை சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு என ஒரு நிவாரண தொகுப்பு திட்டத்தை தயார் செய்து அதனை அமுல்படுத்த வேண்டும் அவ்வாறு செய்தால் தான் அந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை காப்பாற்ற முடியும் என்று காங்கிரஸ் கூறியது ஆனால் உரிய நிவாரண உதவி கிடைக்காவிட்டால் அவை தாக்குப் பிடிக்க முடியாது என்றும் காங்கிரஸ் எச்சரித்தது.தொழில்துறை தொழில்துறைக்கு நிவாரணம் தருகிறேன் என்ற பெயரில் மிகப்பெரிய தொழிலதிபர்கள் 15 முதல் 20 பேருக்கு மட்டுமே பலன் தருகிற வகையில் பல லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள வரிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி விலகிக் கொண்டார்.

பிரதமர் மோடி அறிவித்த போது ஊரடங்கு கரோனா வைரஸ் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அல்ல அதற்கு பதிலாக இந்தியாவின் ஏழை விவசாயிகள் சிறு கடைக்கு அளவில் அன்றாடம் ஊதியம் பெற்று வாழும் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும் அமைப்பு சாராத இந்தியத் தொழில்துறையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது விடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

saamySep 19, 2020 - 09:12:07 AM | Posted IP 108.1*****

always blabbering something

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory