» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

சுதந்திர தினவிழாவில் கரோனாவிலிருந்து விடுதலை என உறுதியேற்போம் : பிரதமர் மோடி

ஞாயிறு 26, ஜூலை 2020 1:00:20 PM (IST)

வரவுள்ள சுதந்திர தின விழாவில், கரோனா தொற்றில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற மன உறுதியை ஏற்போம் என பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது:இன்றைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்கில் போர் நினைவு தினத்தில் நாம் வெற்றி பெற்ற நாளாகும். 21 ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில் கார்கில் தினத்தில் இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் வெற்றிக் கொடியை நிலைநாட்டினர். கார்கில் போர் நடந்த சூழ்நிலையை இந்தியா ஒருபோதும் மறக்காது. கார்கில் போரில் உயிர்நீத்த நமது வீரர்களின் கதைகளை தாய்மார்களின் தியாகத்தை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் அபாயம் இன்னும் போகவில்லை. எனவே நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அசௌகரியமாக இருந்தாலும், தொடர்ந்து முகக்கவசத்தை அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தூய்மையைப் பின்பற்ற வேண்டும்.அதேநேரத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் செவிலியர்கள் போன்றோரின் சேவையை சிந்தித்து பார்க்க வேண்டும். அவர்கள் மணிக்கணக்கில் பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.கரோனாவுக்கு எதிராக போராடும் அதே சமயத்தில் மற்றொரு பக்கம் தொழில், வேலை, படிப்பு என மற்ற விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் நகரத்திலிருந்து கிராமப்புறம் வரை அனைவரும் கரோனாவுக்கு எதிராக நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத கசாயம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கரோனா தொற்று நிலவும் இதே சூழ்நிலையில் மற்ற நோய்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.வரவுள்ள சுதந்திர தின விழாவில், கரோனா தொற்றில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற மன உறுதியை ஏற்போம்.சுதந்திர தினத்தன்று பல மகத்தான மனிதர்களின் தியாகத்தை நினைவு கூற வேண்டும். அவர்களது தியாகத்தின் முயற்சியின் பலனாகவே நாம் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்று பேசியுள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJul 31, 2020 - 10:23:57 AM | Posted IP 173.2*****

உங்க கிட்டே இருந்து எப்போது அய்யா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory