» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

ஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்

செவ்வாய் 26, மே 2020 3:21:57 PM (IST)

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது:- "பிரதமர் மோடியும், அவரின் ஆலோசனை அதிகாரிகளும் ஊரடங்கால் கரோனா பாதிப்பு குறைந்துவிடும், நோயாளிகள் குறைந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு கரோனா பாதிப்பு நாட்டில் குறையவில்லை. கரோனா பாதிப்பை சமாளிக்க, எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். கரோனா நோயைக் கட்டுப்படுத்திவிட்டோம் என மத்திய அரசு நினைத்து வருகிறது.

ஆனால் உண்மையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அடுத்த மாற்றுத்திட்டம் என்ன என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.  கரோனாவை கட்டுப்படுத்த என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கப்போகிறது.   தற்போது இந்தியா எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் ஊரடங்கின் தோல்வியே ஆகும்.  பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை ஊரடங்கு தரவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது” என்றார். 


மக்கள் கருத்து

saamyJun 9, 2020 - 05:41:58 PM | Posted IP 173.2*****

he always thinking about the failures, because he himself is a failure.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory