» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு: சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

திங்கள் 23, மார்ச் 2020 12:17:11 PM (IST)

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் தற்போது கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 100 ஆண்டுகளில் சந்தித்திராத சவால்களை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

கரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது இருந்தால் பொதுமக்கள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். கரோனா தொற்றுக்கான அறிகுறியுடன்  இருப்பவர்கள் அரசுக்கு தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தமிழக மக்கள் அளிக்கும் ஆதரவிற்கு நன்றி. பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று மக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளித்தனர்.

கரோனா வைரஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் போதிய வதிகள் உள்ளன. மத்திய மாநில அரசுகள் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் தற்போது கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் ஒரு உயிரைக்கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory