» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

காஷ்மீரில் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

திங்கள் 16, மார்ச் 2020 4:36:27 PM (IST)

காஷ்மீரில் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். 

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் உடனடியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இதில், பரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் நீண்ட கால கோரிக்கைக்குப் பின்னர் அவர் கடந்த 13ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து, நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், காஷ்மீர் யூனியன் பிரதேச எல்லைக்கு அப்பால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும். இதற்காக மற்றவர்களும் இந்தக் கோரிக்கையை என்னுடன் சேர்ந்து அரசுக்கு வைப்பார்கள் என்று நம்புகிறேன் எனக் கூறினார். இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில், அல்தாப் புகாரி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தூதுக்குழுவினர் நேற்று சந்தித்துப் பேசினார்கள். அப்போது 40க்கும் மேற்பட்ட பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார்கள். அப்போது அவர்களிடம் உள்துறை மந்திரி அமித்ஷா கூறியாவது:  காஷ்மீருக்கு விரைவில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.


மக்கள் கருத்து

உண்மைMar 16, 2020 - 04:38:11 PM | Posted IP 108.1*****

அடுத்து எதாவது ஏடாகூடமாக செய்தால் என்கவுன்டர்தான்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory