» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடருமா என்பதற்கு காலம் பதில் சொல்லும்: டி.ஆர்.பாலு பேட்டி

செவ்வாய் 14, ஜனவரி 2020 5:02:26 PM (IST)

திமுக - காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடருமா என்பது பற்றி காலம் பதில் சொல்லும் என்று திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.  உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என கூறப்பட்டது. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடருமா என்பது பற்றி காலம் பதில் சொல்லும். கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென கே.எஸ். அழகிரி கூறிய பின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்?  கூட்டணியில் பிரச்னை இருந்தால் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரில் தெரிவித்திருக்க வேண்டும். மு.க. ஸ்டாலினை விமர்சித்து கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையால் திமுகவினர் கவலையில் உள்ளனர் என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory