» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

இந்திய அளவில் நிர்வாகத் திறனில் தமிழ்நாடு முதலிடம்: மத்திய அரசு தகவல்

வியாழன் 26, டிசம்பர் 2019 5:38:34 PM (IST)

இந்திய அளவில் பல்வேறு துறைகளின் செயல்பாடு அடிப்படையில் நிர்வாகத் திறனில் தமிழ்நாடு அரசு முதலிடம் வகிப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு 10 துறைகளின் செயல்பாட்டு அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி பெரிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்,  வடகிழக்கு மற்றும் மலைபிரதேச மாநிலங்கள் என மாநிலங்கள் 3பிரிவாக பிரிக்கப்பட்டது.  விவசாயம், சுகாதாரம், நிதி நிர்வாகம், மனித வள மேம்பாடு, வர்த்தகம், சமூக நலத்துறை, நீதித்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 10 துறைகளின் கீழ் மாநிலங்களின் செயல்திறன்கள் மதிப்பிடப்பட்டன.

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மூன்று பிரிவிலும் மாநிலங்கள் செயல்திறன்படி பட்டியலிடபட்டு  இன்று தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைத்தீர்ப்பு அமைச்சகம் தயாரித்து வெளியிட்டுள்ளது.  பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில் இந்தியாவிலேயே நிர்வாகத் திறனில் தமிழ்நாடு 5.62 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரம் (5.40 புள்ளிகள்), 3வது இடத்தில் கர்நாடகம் (5.10 புள்ளிகள்) இடம்பிடித்துள்ளன. பொது உள்கட்டமைப்புத் துறை மற்றும் நீதி, பொது பாதுகாப்புத்துறையிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. சுகாதார துறையில் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இதில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. பொருளாதார நிர்வாகத்தில் தமிழ்நாட்டுக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் கர்நாடகம், மகாராஷ்டிரா, தெலுங்கானா குஜராத் ஆகிய மாநிலங்கள் முதல் 4 இடத்தை பிடித்துள்ளன.  

சுற்றுச்சூழலில் 3வது இடத்திலும்,வேளாண்மையில் 9வது இடத்திலும்,வணிகத்தில் 14வது இடத்திலும், சமூக நலனில் 7வது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது.யூனியன் பிரதேசங்களில் சிறப்பான நிர்வாக திறன் கொண்ட மாநிலமாக புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது.வடகிழக்கு மாநிலங்கள் பிரிவில் இமாச்சல பிரதேசம் முதல் இடம் பிடித்துள்ளது. மனித வள மேம்பாட்டுத் துறையிலும் புதுச்சேரி மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்கள் அதனதன் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளன. தமிழ்நாட்டைப்போல் நீதி மற்றும் பொது பாதுகாப்புத்துறையிலும் சிறந்த யூனியன் பிரதேசமாக புதுச்சேரி முதல் இடம் பெற்றுள்ளது.  


மக்கள் கருத்து

UnmaiDec 28, 2019 - 06:47:24 AM | Posted IP 162.1*****

If Tamil Nadu is top in government administration, then one can imagine the pathetic situation of the entire nation: Baratha maathavuku j

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory