» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை : கமல்ஹாசன் அறிவிப்பு

திங்கள் 9, டிசம்பர் 2019 10:22:44 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வில்லை. என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட 9 மாவட்டங்களிலும் மறுவரையறைப் பணிகளை முடித்து 4 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் மறு அறிவிப்பாணையை தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று மாலை 4:30 மணியளவில் வெளியிட்டார்.

டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டுக்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் : இந்த தேர்தல் மக்கள் நலனுக்கானதாக இருக்கப் போவதில்லை. இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகம்தான் இது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொள்ளும் வியாபாரப் பங்கீடு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறும். எனவே உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory