» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சனி 5, அக்டோபர் 2019 5:11:25 PM (IST)

அயோத்தி ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 17ம் தேதியுடன் நிறைவடையும், வழக்கில் தீர்ப்பு வரும் நவம்பர் 17ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் 2.27 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ராம் லாலா, நிர்மோஹி அகாரா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் ஆகிய மூன்று தரப்பினர் உரிமை கோரி வருகிறார்கள். இந்த வழக்கில் 3 மனுதாரர்களும் சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாக பிரித்து கொள்ளும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நடந்து வருகிறது. பல வருடங்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைவாக முடித்து வைக்க தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று 37வது நாளாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் இந்த வழக்கின் வாதங்கள் வரும் அக்டோபர் 17ம் தேதியுடன் முடித்து வைக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

ராமஜென்ம பூமி வழக்கு விசாரணை அக்டோபர் 18ம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் 17ம் தேதியுடன் வாதங்கள் முடித்து வைக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். முஸ்லிம் தரப்பினர் தங்கள் வாதங்களை அக்டோபர் 14ம் தேதியுடன் நிறைவு செய்வார்கள். அதன் பின் இந்து தரப்பினர் தங்கள் இறுதி வாதங்களை அக்டோபர் 16ம் தேதியுடன் முடிக்க வேண்டும். அக்டோபர் 17ம் தேதியுடன் இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் என நீதிபதிகள் கூறினர். சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு வரும் நவம்பர் 17ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால் அதே நாளில் தீர்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ஆசீர். விOct 9, 2019 - 12:33:20 PM | Posted IP 162.1*****

இதே போன்று நிலுவையில் உள்ள மற்றும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளிலும் தீர்ப்பு எப்போது என்று சொல்லுவீர்களா யுவர் ஆனர். காலம் கடந்து சொல்லப்படும் தீர்ப்புகளால் யாருக்கும் பயன் இல்லை ஜட்ஜ் அய்யா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory