» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

புதன் 25, செப்டம்பர் 2019 5:15:12 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கட்சிகள் தங்களுக்கான சின்னங்களை கோரி விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory