» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிப்பு: சீமான் பேட்டி

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 9:19:48 PM (IST)

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வரும் 25ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் செப்டம்பர் 25-ம் தேதி அறிவிக்கப்படுவர். தேர்தல் பிரசாரம் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து தொடங்கப்படும். விக்கிரவாண்டியில் சட்டசபை உறுப்பினர் இறந்ததால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடக்கிறது.  நாங்குநேரியில் தேர்தல் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விளையாட்டு. 

ஒரு கட்சி ஒருவருக்கு 2 பதவிகளைக் கொடுக்கிறது. அந்த வாய்ப்பை ஏன் அந்தக் கட்சி இன்னொருவருக்குக் கொடுக்கவில்லை? சட்டசபை உறுப்பினராக இருந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற உடன் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். இதனால் நாங்குநேரியில் இடைத்தேர்தல் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலுக்கான பொருள் இழப்பை யார் ஏற்பது?

இரவு உணவு இல்லாமல் பல கோடி மக்கள் தூங்கும் ஏழை நாடு இந்தியா. பச்சிளம் குழந்தைகள் பசியுடன் உணவில்லாமல் தவிக்கின்றனர். இந்த சூழலில் பல கோடி ரூபாய் செலவழித்து ஒரு இடைத்தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடத்துவதால் தேவையற்ற நேர விரயம், பொருள் விரயம் ஏற்படுகிறது.2 தொகுதி இடைத்தேர்தலிலும் 2 கட்சிகளும் வாக்காளர்களை விலைக்கு வாங்குவார்கள். மக்கள் மீது குறையில்லை. அவர்களை வறுமை நிலையில் வைத்திருக்கும் ஆட்சியாளர்களின் குறைதான் இது. இந்த இடைத்தேர்தலை எப்போதோ நடத்தி முடித்திருக்கலாம். இவ்வாறு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory