» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 24‍ம் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்!!

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 9:27:18 AM (IST)

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்றும், வேட்பாளர் நேர்காணல் 24-ந் தேதி நடக்கிறது என்றும் க.அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை(திங்கட்கிழமை) தொடங்கி 30-ந் தேதி முடிவடைகிறது. நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்றும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவது என்றும் தி.மு.க. கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை(விருப்பமனு) கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் படிவம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 23-ந் தேதி(நாளை) திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ.25 ஆயிரம் ஆகும். வேட்பாளர் நேர்காணல் 24-ந் தேதி காலை 10 மணியளவில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory