» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் வேளாண்மையை ஒழித்துக்கட்ட மத்திய பா.ஜ.க அரசு முடிவு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வியாழன் 27, ஜூன் 2019 3:51:32 PM (IST)

தமிழகத்தில் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து வேளாண்மையை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டிவிட மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்து விட்டதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்காக மத்திய அரசிடம் ஓஎன்ஜிசி மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்கள் அனுமதி கேட்டிருப்பது கவலைக்குரியது, கண்டிக்கத்தக்கது. அதேபோல் உண்மையான ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மத்திய அரசு தயாராக இல்லை என்பது வேதனை அளிக்கிறது.  

ஒருபுறம் விவசாயிகளின் நலனுக்கான திட்டங்கள் என கூறிக்கொண்டு, மறுபுறம் தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுப்பது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து வேளாண்மையை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டிவிட மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்து விட்டதா? என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மக்கள் மற்றும் விவசாயிகளை போற்றி நாட்டின் நலனை வளர்த்தெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிJul 2, 2019 - 05:38:53 PM | Posted IP 162.1*****

எல்லாமே தங்களது கையெழுத்துதான் தம்பி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory