» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நாடாளுமன்ற திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு; துணைத் தலைவராக கனிமொழி தேர்வு!!

ஞாயிறு 26, மே 2019 10:10:00 AM (IST)



நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவராக டி.ஆர்.பாலு, துணைத்தலைவராக கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது. இதைத்தொடர்ந்து தி.மு.க. புதிய எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தயாநிதிமாறன், எஸ்.ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட 19 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மாலை 5.15 மணிக்கு தொடங்கிய கூட்டம் 7 மணிக்கு முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர், ‘நமக்கு முழு ஆதரவு வழங்கியுள்ள மக்களின் குறைகளை போக்க வேண்டியது நம்முடைய கடமை. மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் நீங்கள் பிரதிபலிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்திலும், நேரமில்லா நேரத்திலும் மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண முயல வேண்டும். 

நாடாளுமன்றம் நடக்காத நாட்களில் தொகுதியில் மக்களை சந்தித்து மனுக்களை பெற வேண்டும். மக்களுடன் உரையாட வேண்டும். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக கனிமொழி, கொறடாவாக ஆ.ராசா, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவனும் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து

இவன்மே 26, 2019 - 01:43:08 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் திராவிட திருட்டு காட்சிகளை எப்போதும் ஜெயிப்பதால் ஓட்டுக்காக தெலுங்கன் சுடாலினும் , கோமாளி துரைமுருகனும் கனிமொழியை இங்கே அனுப்பி விட்டனர், அதற்கு பதிலாக டயர் நக்கி குரூப்ஸ் எல்லாம் வட நாட்டு கிழவன் மோடியின் யின் ஆதரவாக டுமிழிசையை அனுப்பி வைத்தனர்... மக்கள் மாறி மாறி திராவிட திருட்டு கட்சிகளுக்கு வாக்களிப்பதால்.. கனிமொழியும் டுமிழிசையும் இங்க வந்து ஓட்டு பிச்சை எடுத்தனர் ... அரசியல்வாதிகளுக்கு எல்லாம் பதவி பணம் மட்டும்தான்... இன்னும் மீத்தேன், ஹைட்றோ கார்பன் திட்டத்தையும் தடுக்கவில்லை, இயற்கை வளங்களை அழித்தால் நாளை நாம் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை வரும் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory