» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக, திமுக பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு - தினகரன் குற்றச்சாட்டு!!

வியாழன் 14, மார்ச் 2019 4:11:08 PM (IST)

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுக பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், தேர்தலுக்கு பின் உண்மைகள் வெளிவரும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் சிறையில் இன்று சசிகலாவை சந்தித்து பேசிய பிறகு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுக புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வந்துள்ளன. 

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அமமுக சார்பில் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். வேட்பாளர் பட்டியலும் விரையில் வெளியிடப்படும். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அரசு பதட்டத்துடன் செயல்படுவதால் சந்தேகம் வருகிறது. இதற்கு உரிய விசாரணை தேவை. நடாளுமன்ற தேர்தலுக்குப் பின் பெரும் மாற்றம் வரும். அப்போது உண்மைகள் வெளிவரும். இவ்வாறு தினகரன் பேசினார்.


மக்கள் கருத்து

இவன்Mar 15, 2019 - 10:44:43 AM | Posted IP 162.1*****

ஜெயலலிதா வீட்டு வேலைக்கார குடும்பம் மக்களுக்கே தெரியும்

தமிழன்-Mar 14, 2019 - 05:05:28 PM | Posted IP 172.6*****

உனக்கு வேற வேல இல்லையா.. திமுக நீ கேட்ட amount கோடுகளாய்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory