» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தேர்தல் விதிகள் எதிரொலி அரசு இணைய தளங்களிலிருந்து பிரதமர் மோடி படம் நீக்கம்!

புதன் 13, மார்ச் 2019 4:28:25 PM (IST)

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசு வலைதளங்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 வரை நடக்கிறது. இதற்கான அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மார்ச் 10ஆம் தேதி மாலை 5 மணி டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவித்தார். அப்போது முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசு வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர அமைச்சர்களின் படங்கள் தேர்தல் விதிப்படி நீக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலிருந்தும் அமைச்சர்களின் புகைப்படங்கள் நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அமைச்சரவைச் செயலாளர்களுக்கும், மாநிலச் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதன்படி, பிரதமர் அலுவலக தளம், பத்திரிகை தகவல் ஆணையம் உள்ளிட்ட தளங்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்ற அமைச்சர்களின் படங்களுக்கும் நீக்கப்பட்டுள்ளன. அனுமதியற்ற சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பதாகைகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை மூன்று நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory