» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல: ரஜினியை சரமாரியாக விமர்சித்த சீமான்!

வியாழன் 31, ஜனவரி 2019 1:58:20 PM (IST)

சினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்லஎன்று நடிகர் ரஜினிகாந்த்தை நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துப் பேசினார்.

சென்னை வடபழனியில், மிக:மிக அவசரம் என்ற படத்தின் முன்னோட்ட விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், சேரன், தயாரிப்பாளர் ராஜன், நடிகர் ரித்தீஷ் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

விழாவில் அவர் பேசுகையில், பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருமே இருக்கிறது. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மைதான். குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்வது தான் காவல்துறையின் கடமையாக இருக்க வேண்டும். தலைவரை எங்கே தேடுகிறார்கள் திரையரங்களில்தான். ரஜினிகாந்த்தை ரஜினிகாந்த் என்று சொல்வதே இல்லை. தலைவர் என்று தான் கூறுகிறார்கள். சினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல. ரஜினிகாந்த் தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன், ஜீவானந்தம், பசும்பொன் முத்துராமலிங்கம் இவர்கள் எல்லாம் யார் ?. தலைவன் என்பவன் தன்னையே எரித்து உருக்கிக்கொண்டு உலகத்துக்கு ஒளியைக்கொடுக்கிற மெழுகுவத்தியாக இருப்பவனே தலைவன். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

NATHJan 31, 2019 - 04:02:41 PM | Posted IP 162.1*****

நீங்கள் தான் தமிழன் .................. தலைவன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory