» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா வழக்கில் எப்.ஐ.ஆர் ரத்து: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி

திங்கள் 3, டிசம்பர் 2018 4:17:31 PM (IST)

ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்த தகவலால் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதிக்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக சார்பில் அதிகமான அளவில்  பணப் பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதுதொடர்பாக அத்தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட மருது கணேஷ் மற்றும் வைரக்கண்ணு மற்றும் அருண் நடராசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.    

அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனையின் போது, ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான விபரங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யபட்டது. 

அந்த வழக்கிலும் நீதிமன்றம் அரசிடம் அறிக்கை கோரியிருந்தது. அதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் பேரில், சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யயப்பட்டிருந்தது.   

அதேசமயம் இந்த வழக்கானது சரியான ஆதாரம் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கின் எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யுமாறு கோரி திருவள்ளூரைச் சேர்ந்த நாராயணன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.   இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்த தகவலால் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்ட வழக்கில், எப்.ஐ.ஆர் மார்ச் மாதேமே ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.  இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பான மற்றொரு வழக்கானது நீதிமன்றத்தில் தொடரப்பட்டு அரசிடம் அறிக்கை கோரப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு இவ்வழக்கில் எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டது? இந்த வழக்கில் என்ன மாதிரியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது? என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுதொடர்பான விபரங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory