» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழக அரசு கேட்டுக்கொண்டால் 20 தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்படும் : தேர்தல் கமிஷனர் தகவல்

செவ்வாய் 27, நவம்பர் 2018 8:08:52 AM (IST)

கஜா புயல் பாதிப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.

தி.மு.க. தலைவராக இருந்த மு.கருணாநிதி எம்.எல்.ஏ. மறைவைத் தொடர்ந்து அவர் தேர்வு செய்யப்பட்ட திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. இதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து அ.தி. மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலியாக இருக்கிறது. இந்த 2 தொகுதிகளுக்கும் நடக்க இருந்த இடைத்தேர்தல், பருவமழையை காரணம் காட்டி ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே தகுதி நீக்க வழக்கில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று கடந்த மாதம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.இதையடுத்து, இந்த தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தல் நடத்தப்பட்டால், ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைக்க குறைந்தபட்சம் 6 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்னும் நிலை காணப்படுகிறது. இதனால் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்துமே ஆவலுடன் காத்திருக்கின்றன.மேலும், தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத், தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி இரவு தமிழகத்தின் 12 மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் அடியோடு அழிந்துபோனது.புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. எனினும் கஜா புயலின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கஜா புயல் பாதிப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory