» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை : மோடி மீது முக ஸ்டாலின் தாக்கு

வியாழன் 8, நவம்பர் 2018 5:05:30 PM (IST)

நாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி உயர் மதிப்பிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பண மதிப்பு இழப்பின் 2-வது ஆண்டு தினத்தையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: நாட்டு மக்கள் அனைவரையும் நடுத்தெருவுக்கு தள்ளிய பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு இன்று.

வங்கிகளில் முடிவே இல்லாத நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைத்து அலைக்கழித்ததோடு, வங்கி வாசலிலேயே அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறவாது. அதுமட்டுமா, லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பு பறிபோனதோடு, சிறு - குறு நிறுவனங்கள் மூடு விழா கண்டு, நாட்டின் பொருளாதாரமே பின்னோக்கி தள்ளப்பட்டது. நாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory