» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நடிகர் விஜய், சர்கார் பட தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சிவி சண்முகம்

புதன் 7, நவம்பர் 2018 6:56:25 PM (IST)

சர்கார் பட விவகாரத்தில் நடிகர் விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நேற்று வெளியானது. படத்தில் தமிழகஅரசுக்கு எதிரான வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் அரசின் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகளும் இருந்தன. இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கண்டனம் தெரிவித்திருந்தார். 

திருப்போரூரில் பேட்டியளித்த அமைச்சர் சிவி சண்முகம், சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருப்பது, அரசை அவமதிக்கும் செயலாகும். எனவே நடிகர் விஜய், பட தயாரிப்பாளர் மற்றும் படத்தை திரையிட்ட திரை அரங்குகள் மீது ஆலோசனைக்கு பின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory