» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை: முதல்வர் பழனிசாமி விளக்கம்

செவ்வாய் 30, அக்டோபர் 2018 5:36:57 PM (IST)

டிடிவி தினகரனை, அதிமுகவில் இணையுமாறு அழைப்பு விடுக்கவில்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரனுடன் இணைந்த 18 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் 3வது நீதிபதி தீர்ப்பளித்தார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்றும் நீர் அடித்து நீர் விலகுவதில்லை என தமிழக முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக உருக்கமான அழைப்பு விடுத்திருந்தனர். 

தங்களது அழைப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதிமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எப்போதும் பயம் கிடையாது. சில எட்டப்பர்கள் ஆசை வார்த்தைகளைக் கூறி அதிமுகவை உடைக்க சதி செய்தனர். அதை நம்பித்தான் சிலர் பாதை மாறிச் சென்றனர். அவர்கள் மீண்டும் வர வேண்டும் என்றுதான் நாங்கள் அழைப்பு விடுத்தோம். டிடிவி தினகரன் வர வேண்டும் என நாங்கள் அழைப்பு கொடுக்கவில்லை. ஏனென்றால், அவர் அதிமுக உறுப்பினர் இல்லை. பாதை மாறி சென்றவர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டது என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து

அருண்Nov 2, 2018 - 04:59:43 PM | Posted IP 172.6*****

சரியான செருப்படி...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory