» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சபரிமலை விவகாரத்தில் வன்முறையை தூண்டும் ஆதிக்க சக்திகள்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

வெள்ளி 19, அக்டோபர் 2018 10:31:54 AM (IST)

சபரிமலை விவகாரத்தில் ஆதிக்க சக்திகள் வன்முறையை பரப்ப முடிவு செய்துள்ளன என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுமுதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பயன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் சென்று தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கேரள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது ‘‘சபரிமலை தனித்துவம் மிக்க கோயில். அனைத்த மத நம்பிக்கை கொண்டவர்களும் அந்த கோயிலுக்கு செல்ல முடியும். இதனை ஆர்எஸ்எஸ் மற்றும் சங்க பரிவார் இயக்கங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சபரிமலையின் இந்த தனித்துவத்தை அழிக்க பலமுறை அவர்கள் முயன்றனர். சபரிமலை கோயிலின் பூஜை மற்றும் சம்பிரதாயம் மலையரன் ஆதிவாசி சமூகத்தினுடையது. 

இது, அனைவருக்கும் தெரியும். இந்த நம்பிக்கை கொண்டவர்களை தாக்குவது தான் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களின் திட்டம். இதன்மூலம் அவர்கள் வன்முறையை பரப்ப முடிவு செய்துள்ளனர். சபரிமலையில் தாக்குதல் நடத்தியவர்கள் ஜாதி மற்றும் ஆதிக்க சிந்தனை கொண்டவர்கள். சபரிமலையில் இருந்து பிற்படுத்தப்பட்டவர்களை அகற்ற வேண்டும் என்பதே இவர்களில் நோக்கம். இதுபோன்ற தாக்குதல் சம்பவத்தை அனைத்து நம்பிக்கை கொண்ட மக்களும் கண்டிக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

samiOct 22, 2018 - 09:13:07 AM | Posted IP 162.1*****

வெகுஜன ஆதரவு காரணமாக மேல் முறையீடு செய்யாமல் வீம்பு செய்கிறீர்- ஓகே கம்யூனிஸ்ட் கேரளாவில் காலி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory