» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
வெள்ளி 5, அக்டோபர் 2018 10:24:31 AM (IST)
திரிபுராவில் ஆட்சியைப் பிடித்த பாஜகவுக்கு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
விழுப்புரத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இனி பாஜக கூட்டமென்றால் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேர் திரள வேண்டும். அந்தளவுக்கு கட்சியினர் உழைக்க வேண்டும். கழிவுநீர் பிரச்னையை மாவட்ட நிர்வாகம் தீர்க்க வேண்டும், புதுவை முதல்வர் சாக்கடையை அள்ளிப்போடுவதாக காட்சி தந்துள்ளார். அதுபோல நாம் செய்யக் கூடாது. தூய்மைப் பணியில் திரளாக ஈடுபட வேண்டும். நந்தன்கால்வாய் திட்டம் உள்ளிட்ட உங்களின் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்த, நாளை தமிழக முதல்வரை சந்திக்க உள்ளபோது அறிவுறுத்துகிறேன். தமிழகத்தில் பாஜகவை நோக்கியே அனைத்துக் கட்சிகளும் தாக்குதல் நடத்துகின்றன.
ஒரு காலத்தில் பாஜக இருப்பதே தெரியாமல் இருந்த நிலையில், இன்று நம்மை மையப்படுத்தி மற்ற கட்சியினர் சுழல்வதால் வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். எத்தனை கட்சிகள் சேர்ந்து வந்தாலும் பாஜகவை இனி வெல்ல முடியாது. கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 4 மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருந்தது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தற்போது, 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. வரும் 2019- மக்களவைத் தேர்தலிலும் பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிக்க பாடுபடுவோம். இங்கு அதிமுக, திமுக முடிந்து போன சரித்திரம். ஓரிடம் கூட இல்லாத திரிபுராவில், ஆட்சியைப் பிடித்த நமக்கு செல்வாக்குள்ள தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமல்ல என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர் : தமிழிசை
வியாழன் 14, பிப்ரவரி 2019 1:23:59 PM (IST)

நாடாளுமன்றத் தேர்தல் : 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சீமான்
புதன் 13, பிப்ரவரி 2019 7:42:09 PM (IST)

எனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறுபவர்கள் மெகா கூட்டணி அமைப்பது ஏன்? மோடி கேள்வி
திங்கள் 11, பிப்ரவரி 2019 10:16:11 AM (IST)

மக்களவைத்தேர்தல் எதிரொலி : 3ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்ய உத்தரவு
வெள்ளி 8, பிப்ரவரி 2019 8:23:12 PM (IST)

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
செவ்வாய் 5, பிப்ரவரி 2019 3:46:06 PM (IST)

சினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல: ரஜினியை சரமாரியாக விமர்சித்த சீமான்!
வியாழன் 31, ஜனவரி 2019 1:58:20 PM (IST)
