» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சபாநாயகர் பதவியிலிருந்து தனபாலை நீக்க வேண்டும்: சட்டப்பேரவை செயலருக்கு கருணாஸ் கடிதம்

புதன் 3, அக்டோபர் 2018 12:35:30 PM (IST)

ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரி சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் எம்எல்ஏ கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக அரசியலில் கடந்த சில தினங்களாக பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது நடிகர் கருணாஸ் விவகாரம். முதல்வரை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் கருணாஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ள அவர் மீண்டும் முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தரப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் எம்எல்ஏ கடிதம் எழுதி உள்ளார். அவரது வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் பேரவையின் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் சட்டங்களை சபாநாயகர் தனபால் மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ‘சபாநாயகரின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையால் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory