» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
பேரணி நோக்கம் அஞ்சலி செலுத்துவதற்கு மட்டும் தான் : சென்னையில் மு.க. அழகிரி பேட்டி
புதன் 5, செப்டம்பர் 2018 1:29:55 PM (IST)

கருணாநிதிக்கான அமைதிப் பேரணி வேறு எந்த நோக்கத்திற்காகவும் நடத்தப்படவில்லை, தனக்கு ஆதரவாக சுமார் ஒன்றரை லட்சம் பேர் பேரணியில் பங்கேற்றதாகவும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் 30வது நினைவு நாளை முன்னிட்டு அவரது மகன் அழகிரி தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.பலத்த போலீசார் பாதுகாப்புடன் தொடங்கிய இந்த பேரணியில் மு.க. அழகிரி மற்றும் அவரது மகன் துரைதயாநிதி அழகிரி, மகள் கயல்விழி ஆகியோர் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து பல ஆதரவாளர்களும் பேரணிக்கு கருப்பு உடையில் வந்திருந்தனர். கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்த அழகிரி மலர்வளையம் வைத்து, பூ தூவி மரியாதை செய்தார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, பேரணிக்கு எந்த நோக்கத்திற்காவும் நடத்தப்படவில்லை, மும் கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி மேற்கொண்டோம். கருணாநிதி நினைவு பேரணிக்கு ஆதரவு அளித்த காவல்துறையினருக்கு நன்றி. சுமார் ஒன்றரை தொண்டர்கள் இந்த பேரணியில் பங்கேற்றதாகவும், அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர் : தமிழிசை
வியாழன் 14, பிப்ரவரி 2019 1:23:59 PM (IST)

நாடாளுமன்றத் தேர்தல் : 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சீமான்
புதன் 13, பிப்ரவரி 2019 7:42:09 PM (IST)

எனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறுபவர்கள் மெகா கூட்டணி அமைப்பது ஏன்? மோடி கேள்வி
திங்கள் 11, பிப்ரவரி 2019 10:16:11 AM (IST)

மக்களவைத்தேர்தல் எதிரொலி : 3ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்ய உத்தரவு
வெள்ளி 8, பிப்ரவரி 2019 8:23:12 PM (IST)

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
செவ்வாய் 5, பிப்ரவரி 2019 3:46:06 PM (IST)

சினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல: ரஜினியை சரமாரியாக விமர்சித்த சீமான்!
வியாழன் 31, ஜனவரி 2019 1:58:20 PM (IST)
