» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கருணாநிதியின் புகழை போற்றிப் பாதுகாப்போம் : திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பதிவு

வெள்ளி 27, ஜூலை 2018 1:22:41 PM (IST)

சோதனைகளையெல்லாம் சாதனைகளாக்கி திமுக தலைவர் கருணாநிதியின் புகழை போற்றிப் பாதுகாப்போம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சீறுநீரக நோய் தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டு திமுக தலைவர்கருணாநிதி சிகிச்சை பெற்று வந்த தகவலால் நேற்று கோபாலபுரம் பகுதியே பரபரப்பானது. நேற்றிரவு அவரது வீட்டிற்கு துணை முதல்வர் ஓபிஎஸ்,அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வந்து நலம் விசாரித்தனர். இன்றும் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் தொலை பேசியில் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். 

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், கலைத்துறையில் 70 ஆண்டுகள், முரசொலி பவளவிழா,திமுக தலைவராக பாென்விழா, சோதனை களையெல்லாம் சாதனைகளாக்கி அரை நூற்றாண்டு கால அரசியலின் அசைக்க முடியாத சக்தியான திமுக தலைவர் கருணாநிதி யின் புகழை போற்றிப் பாதுகாப்போம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory