» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஸ்டாலினை விட பிரதமர் மோடிக்கு தமிழ் உணர்வு நூறு மடங்கு அதிகம் : பொன்.ராதாகிருஷ்ணன்

புதன் 4, ஜூலை 2018 12:30:36 PM (IST)

திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு இருக்கும் தமிழ் உணர்வைவிட பிரதமர் மோடிக்கு நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

கைலாஷ் - மானசரோவர் யாத்திரைக்காக திபெத்துக்குச் சென்ற 1,500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, இதுவரை 150 இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மற்றவர்களையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கைலாஷ் - மானசரோவர் யாத்திரைக்காக திபெத்துக்குச் சென்ற 1,500 பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். அவர்களை மீட்க வெளியுறவுத்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதில், பிரதமரின் அலுவலகம் முழுமையாக கவனம் செலுத்திவருகிறது. எந்தவித பிரச்னையுமின்றி அவர்களை மீட்டு வரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

மேலும், திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு இருக்கும் தமிழ் உணர்வைவிட பிரதமர் மோடிக்கு நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுடன் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக ஒருமுறையாவது தமிழுக்காக பேசியதுண்டா? திமுவை சார்ந்த எந்த பிரதமராவது, அமைச்சராவது பேசியதுண்டா?

தமிழ் உணர்வில் நல்ல தமிழ் பற்றாளர் எப்படியிருப்பாரோ அதே உணர்வு பிரதமர் மோடியிடமும் உள்ளது. இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். சமஸ்கிருதத்தைவிட பழமையான மொழி தமிழ் என்று பிரதமர் சொன்னபோது ஒரு தமிழ் உணர்வாளராவது பாராட்டினார்களா? தமிழை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கெல்லாம்  என்ன யோக்கியதை இருக்கிறது என கூறினார். 


மக்கள் கருத்து

அடேய் சோழமுத்தாJul 7, 2018 - 05:44:43 PM | Posted IP 162.1*****

ஓஒ அப்படியா ... அப்போ 13 பேரை சுட்ட போலீசை அர்ரெஸ்ட் பண்ண சொல்லு .. புண்ணியமா போகும்

நிஹாJul 5, 2018 - 10:24:35 AM | Posted IP 162.1*****

தமிழை கொல்லும் உணர்வு அதிகம் அப்படித்தானே?

ஒருவன்Jul 5, 2018 - 08:18:45 AM | Posted IP 162.1*****

அந்த பொறி மண்டை வாயில பொய் பொய்யா வரும் , ஆனால் உண்மை வராது

ManithanJul 5, 2018 - 12:03:13 AM | Posted IP 162.1*****

Solliputanga avunga kadhala

A .R .சாமிJul 4, 2018 - 01:11:38 PM | Posted IP 162.1*****

எனவே தான் 13 பேரை சுட்டு கொன்றதை கண்டுகொள்ளாமல் இருந்தாரோ நீங்க சுத்துற ரீல நீங்களே படமாக்குவீங்க பார்க்கற மக்கள் முட்டாள்கள் இல்லனு எலெக்க்ஷன்ல காட்டுவாங்க வோட்ட்ல இல்ல நேர்ல பாருங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory