» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பூனை சகவாசம், பாயை பிராண்டும் ... தினகரன் மீது அம்மா நாளிதழில் கடும் சாடல்

சனி 16, ஜூன் 2018 12:20:56 PM (IST)

8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு அளித்தது குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலர் தினகரனை, இதுதான் "பூனை சகவாசம், பாயை பிராண்டும்" என்பதோ என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நமது அம்மா நாளிதழ் கடுமையாக சாடியுள்ளது. 

அதில், தலைமை நீதியரசரின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பது போல "டோக்கன் செல்வர்" புலம்புகிறாரே...கருணாநிதி பிறந்தநாளில், கட்சி அலுவலம் திறந்தவர், கனிமொழி ஸ்பெக்டரம் வழக்கில் இருந்து விடுதலையானதற்கு முதல் வாழ்த்துச் சொன்னவர்... திமுக. வழக்கமாக ஆர்.கே.நகரில் வாங்குகிற ஐம்பத்து ஏழாயிரம் வாக்குகளில் முப்பத்து நாலாயிரம் வாக்குகளை திரைமறைவு ஒப்பந்தம் போட்டு தனது சோத்துப்பானைச் சின்னத்திற்கு சொந்தமாக்கிக் கொண்டவர்...

அந்த திமுகவோடு வைத்திருக்கும் திருட்டு உறவாலும், அவர்களோடு கொண்டிருக்கும் பழக்க தோஷத்தாலும், நீதிபதியை பழித்து உள்நோக்கம் கற்பித்து ஊளையிடுகிறார்... தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்பு வராவிட்டால், "வழங்கிய தீர்ப்பா, வாங்கி தீர்ப்பா" என்றெல்லாம் நீதியரசர்களை வசைபாடுகிற திமுகவின் விஷமத்தையே, இந்த திகார்கரனும் பின்பற்றுகிறார்... இதுதான் "பூனை சகவாசம், பாயை பிராண்டும் என்பதோ"... என கடுமையாக சாடியுள்ளது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJun 16, 2018 - 05:13:04 PM | Posted IP 162.1*****

காலில் விழுந்து முதல்வர் பதவியை பெரும் போது இந்த பூனை கண்ணுக்கு தெரியவில்லை போலும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory