» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்: ரஜினிகாந்த் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

வியாழன் 31, மே 2018 10:25:17 AM (IST)

தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்பினரும் ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ரஜினி பேசியது அவரது குரலா? பாஜக அல்லது அதிமுகவினுடையதா என்பது சந்தேகமாக உள்ளது. போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதிக்கு போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்கு தெரியும். சமூக விரோதிகள் யார் என்று தெரியும் என்ற ரஜினி நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சபரிமே 31, 2018 - 01:20:55 PM | Posted IP 162.1*****

சமூக விரோதிகள் இல்லையென்றால் வேறு யார் காரணம் தம்பி - திமுகவா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory