» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நடப்பது அம்மா ஆட்சி இல்லை.சும்மா நடக்கும் ஆட்சி : துாத்துக்குடியில் டி.ராஜேந்தர் பேட்டி

புதன் 23, மே 2018 7:01:12 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என அரசு தெரிவிக்க வேண்டும், நடப்பது அம்மா ஆட்சி அல்ல சும்மா ஆட்சி என துாத்துக்குடியில் இலட்சிய தி.மு.க தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்தர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் நடந்த போராட்டம், 100 வது நாளில் ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்ற மக்கள்மீது தடியடி நடத்திய காவல்துறையினருக்கு துப்பாக்கிச்சூடு நடத்திட அனுமதி கொடுத்தது யார் என்பது தெரிய வேண்டும். அவர்மீது விசாரணை நடத்திட வேண்டும். 

வெள்ளைக்காரன் ஆட்சி நடத்தியபோதுகூட, இவ்வளவு பெரிய அராஜகமான தாக்குதல் நடந்தது இல்லை. இது அதைவிட மிகக் கொடூரமானது. காயம்பட்டவர்களுக்குத் தண்ணீர்கூட இல்லாத நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் தற்போது பொம்மை ஆட்சிதான் நடைபெறுகிறது. அம்மா ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனக் கூறி வருகிறார்கள். நடப்பது அம்மா ஆட்சி இல்லை. இது ஒரு சும்மா நடக்கும் ஆட்சி. தொடர்ந்து பல்வேறு பிரசச்னைகள் நடைபெற்று வருவதால் அரசு உடனடியாகத் தலையிட்டு ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என அறிவிப்பு விடுக்க வேண்டும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory