» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஊழலை என்று எதிர்த்தேனோ அன்றே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் : சகாயம் ஐஏஎஸ்

திங்கள் 12, மார்ச் 2018 11:29:52 AM (IST)

ஊழலை என்று எதிர்த்தேனோ அன்றே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விவசாயிகள் கருத்தரங்கம்  ஒன்றில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, என்னுடைய சமூகம் என்றைக்கு விழிப்பு பெறுகின்றதோ, அன்றைக்கு வல்லமை பெறுகிறது என்று நான் நம்புகிறேன். நிச்சயமாக என்னுடைய சமூகம் விழிப்பு பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இன்றைக்கு கூட என்னை பார்த்து நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். என்றைக்கு நான் ஊழலை எதிர்க்க தொடங்கிவிட்டேனோ, அன்றைக்கே நான் அரசியலில் இருக்கின்றேன் என்று தான் அர்த்தம். அது தேர்தல் அரசியலா? என்பதை என்னுடைய சமூகம் முடிவு செய்யட்டும், அது முடிவு செய்கின்றபோது, விழித்தெழும்போது நிச்சயமாக ஒரு முடிவு பிறக்கும் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சாமிMar 13, 2018 - 12:04:02 PM | Posted IP 45.11*****

இவரும்- கோமாளி லிஸ்டில் சேர்ந்தாச்சா

நண்பன்Mar 12, 2018 - 02:43:10 PM | Posted IP 103.3*****

வாழ்த்துக்கள் ஐயா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory