» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நானும் கமலும் பயணிக்கும் பாதை வேறு, சேரும் இடம் ஒன்று : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

வெள்ளி 23, பிப்ரவரி 2018 1:51:48 PM (IST)

நானும் கமலும் வேறு பாதையில் பயணித்தாலும் சேரும் இடம் ஒன்று தான் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.தொடந்து அரசியல் குறித்து பல்வேறு ஆலாேசனைகள் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த ரஜினிகாந்த், மாவட்டத்தின் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பது முதல் பணி. அதெல்லாம் முடிந்த பிறகு தமிழகத்தில் கண்டிப்பாக சுற்றுப் பயணம் செய்வேன். 

காவிரி விஷயத்திற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது நல்ல விஷயம். கமல் அரசியல் கட்சி பற்றியும் அவரது பொதுக்கூட்டம் பற்றியும் உங்கள் கருத்து என்ன என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, கமல் அரசியல் கட்சி மாநாடு நன்றாக இருந்தது. ஏற்கனவே கமலுக்கு வாழ்த்து கூறி விட்டேன், மீண்டும் வாழ்த்தியுள்ளேன் நானும் கமலும் வேறு பாதையில் பயணித்தாலும் சேரும் இடம் ஒன்று தான். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் இருவரின் நோக்கமும் என்றார் .


மக்கள் கருத்து

annyanFeb 27, 2018 - 04:14:49 PM | Posted IP 103.1*****

மங்காத்தா டா....

பாலாFeb 23, 2018 - 06:17:44 PM | Posted IP 61.14*****

அதான் தெரியுமே தலீவா கடைசில ரெண்டுபேருமே போய் மஸ்தான் கிட்ட சேருவீங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory