» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சென்னை போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

ஞாயிறு 18, பிப்ரவரி 2018 7:41:24 PM (IST)பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், இன்று போயஸ் தோட்டத்திற்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.

கமல்ஹாசன் சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறும்போது, ”என்னுடைய நண்பர் கமல் அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பர் கமல்ஹாசன், பணம், புகழ், பெயர் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எண்ணத்திலேயே வந்திருக்கிறார். ஆண்டவனின் ஆசிர்வாதம் அவருக்கு கிடைக்கவேண்டும். எல்லா பயணத்திலும் கமல் வெற்றியடைய வேண்டும். சினிமாவில் அவருடைய பாணி வேறு, என்னுடைய பாணி வேறு. அதுபோல் அரசியலிலும் அவருடைய பாணி வேறு. என்னுடைய பாணி வேறு. ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் இருவரின் நோக்கம்” என்று ரஜினிகாந்த் கூறினார்.

பின்னர், கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். ”எனது வாழ்வில் ஒரு முக்கிய பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அரசியல் முடிவு குறித்து அவரிடம் சொன்னேன். பயணம் புறப்படுவதற்கு முன்னர் எனக்கு பிடித்தவர்களைச் சந்தித்து இதுகுறித்து கூறி வருகிறேன். கூட்டத்தில் கலந்துகொள்ள வரும்படி ரஜினியிடம் கூறினேன். வருவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. நட்பு ரீதியான சந்திப்பு. நான் மேற்கொள்ளவுள்ள பயணத்திற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார். எனக்கும் நண்பர் ரஜினிக்கும் 40 வருட நட்பு உள்ளது. இருவரது வீட்டில் முக்கியமான விசேஷம் எது நடந்தாலும் செய்தியை தெரிவித்துக்கொள்வோம்.” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory