» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல்: நவம்பர் 27-ல் வேட்பு மனுதாக்கல் தொடக்கம்

வெள்ளி 24, நவம்பர் 2017 11:16:38 AM (IST)

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணியினருக்கு ஒதுக்கப்பட்ட மறுநாளே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி உறுப்பினரான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை தலைமை தேர்தல் கமி‌ஷன் ரத்து செய்தது. இந்நிலையில்தான், திடீரென நேற்று, தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தீர்ப்பை வெளியிட்டது. மதுசூதனன் தலைமையிலான அணியினருக்குதான் இரட்டை இலை சின்னம் என அறிவிக்கப்பட்டது. அதிமுகவினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட நிலையில், சூட்டோடு சூடாக இன்று ஆர்கே நகர் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. 

டிசம்பர் 21ம் தேதி ஆர்.கே.நகருக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் நவம்பர் 27ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும் என்றும் மனுதாக்கல் செய்ய டிசம்பர் 4ஆம் தேதி கடைசி நாள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது.  அதேபோல் மனுவை திரும்பப் பெற டிசம்பர் 7ஆம் தேதி கடைசி நாள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 24ல் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகள் இன்று முதல், உடனடியாக அமலுக்கு வந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory