» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அரசியல் களத்தில் இறங்க வேண்டிய அவசரம் தற்போது இல்லை... ரஜினிகாந்த் பேட்டி

வியாழன் 23, நவம்பர் 2017 10:15:28 AM (IST)

அரசியலுக்கு வர வேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் ரசிகர்களை கடந்த மே மாதம் சந்தித்த போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றார். மேலும் போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்றும் கூறியிருந்தார். அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவருடைய நண்பர் ராஜ்பகதூர் உறுதி செய்தார். ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அவசியம் என்ன என்பது குறித்த மாநாட்டை தமிழருவி மணியன் திருச்சியில் நடத்தினார்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினி தனது பிறந்தநாளில் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று தகவல்கள் வந்தன. இதனால் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்தில் நேற்று தனது இஷ்ட தெய்வமான ராகவேந்திரரை வணங்கினார். இதனால் அவரிடம் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற்றுக் கொண்டதாக கருதப்பட்டது. 

இந்நிலையில், மந்த்ராலயத்தில் இருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல் பிரவேசம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு ரஜினி கூறுகையில் களத்தில் இறங்க வேண்டிய அவசரம் இல்லை. எனது பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பேன். காலா படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்றார். ரஜினிகாந்த் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பான எதிர்பாப்ப்பு நிலவிவந்த நிலையில், தற்போது எந்த அவசரமும் இல்லை என்று ரஜினி கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து

M.RamanathaboopathiNov 23, 2017 - 12:34:59 PM | Posted IP 103.3*****

இப்போ இல்லை தலைவரே. எப்போவுமே இல்லை என்பது தான் உண்மை தலைவரே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory