» சினிமா » செய்திகள்
வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்: இளையராஜா புகழாரம்!
வியாழன் 9, மார்ச் 2023 3:13:29 PM (IST)
"1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்" என இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
'அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்நிலையில், டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா ‘வெற்றிமாறன் திரையுலகின் முக்கியமான இயக்குநர். அவருடைய ஒவ்வொரு திரைக்கதையும் வேறுவேறானவை. அதில் எனக்கு பெரிய சந்தோஷம். 1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்’ எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினி - கமல் இணைந்து நடிக்க முயற்சி எடுத்தேன் : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
திங்கள் 12, மே 2025 12:40:29 PM (IST)

போர் பதற்றம் எதிரொலி : தக் லைஃப்: இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 4:28:30 PM (IST)

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)
