» சினிமா » செய்திகள்

பாபா மறுவெளியீடு: மீண்டும் டப்பிங் பேசினார் ரஜினி

திங்கள் 28, நவம்பர் 2022 12:26:45 PM (IST)



‘பாபா’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட படம் பாபா. இந்த படத்தை அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தை தொடர்ந்து நான்பாவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், முக்கிய வேடங்களில் ரியாஸ் கான், கவுண்டமணி, தில்லி கணேஷ், சுஜாதாம் நம்பியார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

பாபா படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளான நிலையில், மீண்டும் புதுப்பொழிவுடன் திரையில் வெளியாக தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு படத்தை மேம்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, படத்தில் சில காட்சிகளுக்கு மீண்டும் டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார் ரஜினி. டப்பிங் செய்யும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான், படத்தில் வரும் பிரபல பாடல்களான மாயா மாயா, கிச்சு கிச்சு, சக்தி கொடு ஆகிய பாடல்கள் டால்பி மிக்ஸ் தொழில்நுட்பத்தில் மாற்றியுள்ளார். இந்த படம், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory