» சினிமா » செய்திகள்

கரோனா கட்டுப்பாடுகள் எதிரொலி: அஜித்தின் வலிமை ரிலீஸ் தள்ளிவைப்பு!

வெள்ளி 7, ஜனவரி 2022 10:40:06 AM (IST)

பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பொங்கலுக்கு வெளியாகவிருந்த ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

வலிமை படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதால் தற்போது வலிமை படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory