» சினிமா » செய்திகள்

இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கரோனாவால் மரணம்

திங்கள் 17, மே 2021 11:44:20 AM (IST)

பிரபல இயக்குநர், நடிகர் அருண்ராஜா காமராஜின் மனைவி கரோனா தொற்றால் இளம் வயதில் உயிரிழந்தார். 

2013ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். தொடர்ந்து மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் 2017ஆம் ஆண்டு மரகத நாணயம் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். இந்தப் பாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிப்பு தவிர்த்து தெறி, காக்கிசட்டை, கபாலி, காலா உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் பல்வேறு பாடல்களையும் அருண்ராஜா பாடியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு கனா படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் அருண்ராஜா.

இந்நிலையில் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 38. அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா மறைவுக்குத் திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory