» சினிமா » செய்திகள்

கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ரஜினி

வியாழன் 13, மே 2021 4:08:02 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்த தகவலை அவரது மகள் சவுந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

கரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதிதீவிரமாகி உள்ளது. நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தாலும் கரோனாவுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாகி உள்ளது. பொதுமக்கள் உடன் திரைப்பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியை ஆர்வமாய் எடுத்து வருகின்றனர். ஏற்கனவே 60 வயதை கடந்த கமல், சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இளம் நடிகர்களும் தடுப்பூசி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இன்று (மே 12) தனது இல்லத்தில் கரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். இது அவரின் இரண்டாவது கட்ட தடுப்பூசி என தெரிகிறது. இதுப்பற்றி அவரது மகள் சவுந்தர்யா டுவிட்டரில், ‛‛நம்ம தலைவர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். கரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெல்வோம். அனைவரும் மாஸ்க் அணியுங்கள், பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்'' என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory